Home மாவட்ட செய்திகள்மத்திய மாவட்டம்ஈரோடு 6 நாட்களாக இருளில் மூழ்கிய கிராமம்… குடிநீர் இல்லாமல் அவதி… அதிகாரிகளிடம் கோரிக்கை…!!

6 நாட்களாக இருளில் மூழ்கிய கிராமம்… குடிநீர் இல்லாமல் அவதி… அதிகாரிகளிடம் கோரிக்கை…!!

by Revathy Anish
0 comment

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில் கரை, திங்களூர், கோட்டமாளம், பூதாளப்புரம் உட்பட 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த மலை கிராமங்களுக்கு திம்பம் மலைப்பாதை வழியாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி ஏற்பட்ட மின்கம்பியில் ஏற்பட்ட கோளாறினால் மலைப்பகுதிக்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இது குறித்து பொதுமக்கள் மின் ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து 6 நாட்களாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறது வருகின்றனர். மேலும் ஊராட்சி மின்மோட்டர் இயக்க முடியாது அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இரவு நேரங்களில் விளக்குகள் இல்லாததனால் கிராமம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மீண்டும் மலை கிராமங்களுக்கு மின்விளயோகம் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.