99
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குடும்பங்களுடன் இணைந்து பார்க்கும்படி இவர் பார்த்து பார்த்து படங்கள் நடிக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அயலான்.
இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகிறது. இந்நிலையில், இவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.