Home செய்திகள் அக்னி வீரர்களுக்கு காலியிடங்களில் 10% ஒதுக்கீடு….மந்திரி நித்யானந்த் ராய்….!!!

அக்னி வீரர்களுக்கு காலியிடங்களில் 10% ஒதுக்கீடு….மந்திரி நித்யானந்த் ராய்….!!!

by Sathya Deva
0 comment

பாராளுமன்ற மேலவையில் தமிழக எம்பி சண்முகம் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்விவகார துணை இணை மந்திரி நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வ பதிலை அளித்துள்ளார். அதில் நடப்பு ஆண்டு ஜூலை 1ஆம் தேதியின்படி மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் அஸ்ஸாம் ரைபிள் படையில் மொத்தம் 84,106 காலி பணியிடங்கள் உள்ளன. மொத்தமுள்ள 10 லட்சத்து 45 ஆயிரத்து 751 பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் தொடர்ச்சியாக நிரப்பப்படும் என்று கூறினார்.

மத்திய பணியாளர் தேர்வாணையம் எஸ்.எஸ்.சி உள்ளிட்டவற்றில் வழியை இந்த பணியிடங்கள் விரைவாக நிரப்பும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் 2023-2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் 67, 345 பேர் பணியமர்த்தப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் அக்னி வீரர்களுக்கு காலியிடங்களில் 10% ஒதுக்கீடு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதன்படி கான்ஸ்டபிள் மற்றும் ரைபிள் மேன் பதவிகளின் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதே போன்று அதிக வயது வரம்பில் இருந்து தளர்வு அளிக்கவும் மற்றும் உடல் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவும் தற்காலிக பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.