இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதி பஜ்ஜெட்டில் தங்கம் வெள்ளி பிளாட்டினத்தின் இறக்குமதி சதவீதம் குறைக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன் அடிப்படையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து 6,415 க்கும், சவரன் 120 ரூபாய் குறைந்து 51,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி 89 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.