விமான தாமதத்தால் இந்த ஆண்டு மே மாதம் வரை 11 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்க 13 கோடி வழங்கியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு கொரானா காரணமாக விமானத்துறையை பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் விமான தாமதத்தால் மொத்தம் 2.06 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக செலவு தொகை 62.07 லட்சம் என்று கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு 8.03 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் அதற்காக செலவழித்த தொகை 3.91 கோடி என்று கூறப்படுகிறது.
அதேபோல் 2022 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 14 .83 லட்சம் எனக் குறிப்பிடப்படுகிறது. இதனால் 26.53 கோடி செலவு ஆனது என மக்களவையில் சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் தெரிவித்தார். மேலும் திட்டமிட்ட உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனராகம் ஒப்புதல் அளித்த அட்டவணையின் படி தங்கள் விமானங்கள் இயக்கப்படுகின்றன இருப்பினும் வானிலை, தொழில்நுட்பம், செயல்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் விமானங்கள் தாமதம் ஆகின்றன என கூறப்படுகிறது.