Home செய்திகள் மத்திய பட்ஜெட்…ஆம் ஆம்தி எம்.பி ராகவ் சதா பேச்சு…!!

மத்திய பட்ஜெட்…ஆம் ஆம்தி எம்.பி ராகவ் சதா பேச்சு…!!

by Sathya Deva
0 comment

மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அதில் ஆம் ஆம்தி எம்.பி ராகவ் சதா கூறுகையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும்போது சமூகத்தின் சில பிரிவுகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை ஆனால் இம்முறை அரசாங்கம் அனைவரையும் அதிருப்தி அடைய செய்துள்ளது எனவும் அதில் பாஜக ஆதரவாளர்கள் கூட இருக்கின்றார்கள் எனவும் கூறுகின்றார். கடந்த பத்தாண்டுகளில் வருமான வரி, ஜிஎஸ்டி மற்றும் மூலதன ஆதாய வரி போன்ற வரிகள் மூலம் பொதுமக்கள் வருமானத்திலிருந்து 70 முதல் 80 சதவீதத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டது என எடுத்துரைத்தார்.

அவர் “நாங்கள் இங்கிலாந்தை போல வரி செலுத்துகிறோம் ஆனால் சோமாலியாவை போல சேவைகளை பெறுகிறோம் “என்ற பழமொழியை கூறினார். உலக தரம் வாய்ந்த மருத்துவம். போக்குவரத்து,கல்வி போன்றவற்ற அரசாங்கம் நமக்கு வழங்குகிறதா என்று கேள்வி எழுப்பினார். 2019-ல் பாஜக அரசுக்கு 303 இடங்கள் கிடைத்தன ஆனால் மக்கள் அந்த இடங்களுக்கு 18% ஜிஎஸ்டி விதித்து அவற்றை 240 கீழ் கொண்டு வந்தனர். இதனால் கடந்த 25 மாதங்களில் உண்மையான கிராமப்புற ஊதியங்கள் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மேலும் உணவு பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றால் தான் குறைவான இடங்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். இந்த நிலைமை இன்னும் தொடர்ந்தால் பாஜகவுக்கு 120 இடம் கூட இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.