தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 72 வயதாகும் இவர் இப்போதும் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக ‘வேட்டையன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் ஞானவேல் தயாரிக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதனை தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடிக்கிறார் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இவர் தனது இளைய மகள் சௌந்தர்யாவின் மகன் பள்ளிக்குச் செல்ல அடம் பிடித்துள்ளதால் அவரை சமாதானம் செய்து தனது பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சௌந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.