ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக துப்பாக்கி சண்டை அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினருடன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு படையினரும் உள்ளூர் போலீசாரும் இணைந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் கூடுதல் வீரர்கள் ஜம்முகாஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் சம்பா செக்டாரில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் சர்தேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைய சுரங்கம் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
எனவே ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிகளை உன்னிப்பாக கவனித்து அங்கு அடர்ந்த புதர்கள் மற்றும் வனப்பகுதியில் கவனம் செலுத்தவும் மேலும் தேடுதல் வேட்டைக்காக ட்ரோன்களும் குவிக்கப்பட்டுள்ளன. அங்கு சுரங்கங்கள் எதுவும் இருந்தால் அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களில் 50 முதல் 60 பேர் எல்லை வழியாக ஜம்மு காஷ்மீரில் ஊடுருவுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. அதனை தடுக்க சுரங்க வழி பாதைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன்றனர்.