காவிரியின் குறுக்கே மாண்டியா மாவட்டத்தின் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை இரண்டாவது முறையாக நேற்று நிரம்பியுள்ளது. கே .ஆர். எஸ் எனப்படும் இந்த அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியாகும். மேலும் இந்த அணைக்கு ஒரு வினாடிக்கு 41,099 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் அந்த அணையின் நீர்மட்டம் நிரம்பி உள்ளதால் அந்த நீர் அப்படியே முழுமையாக திறக்கப்படுகிறது . இந்த அணையில் இருந்து மொத்தம் 68,852 நீர் திறந்து விடப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் கர்நாடகா- தமிழ்நாடு எல்லை எல்லையான பிலி குண்டுலுவில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த மழை வெள்ளத்தினால் ஒகேனக்கல்லில் காவேரி நீர் வெள்ளமாகப் பாய்ந்து ஓடுவதால் கடந்த 10 நாட்களாக அங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அந்த ஆற்றின் பரிசல்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கலில் இருந்து மேட்டூர் அணைக்கு காவிரி நீர் ஆக்ரோஷமாக சென்று கொண்டிருக்கிறது எனவும் கூறப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டி உள்ள நிலையில் தற்போது 28,856 கன அடி உள்ளது. அதாவது மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பு 52.662 டிஎம்சி ஆக உள்ளது என கூறப்படுகிறது.