ஈரோடு மாவட்டம் சோலார் ஈ.பி. நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் நடமாடி வருகின்றனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள வீட்டுக் கதவை தட்டுவதும், காலிங் பெல் அழுத்துவதும் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனையடுத்து அவர்கள் கத்தியுடன் தெருவில் திரிவது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
இது குறித்து அப்பகுதியினர் மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் நள்ளிரவில் மர்ம நபர்கள் கத்தியுடன் சுற்றி வருவதாலும், வீட்டு கதவுகளை தட்டுவதாலும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே போலீசார் நள்ளிரவில் திரியும் மர்மநபர்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.