சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் போஸ் வெங்கட். இவர் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”சார்”. எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை கிராஸ் ரோட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் ரிலீசான நிலையில் படத்தின் தலைப்பை தவிர்க்க முடியாத காரணத்தினால் சார் என மாற்றியுள்ளனர்.
இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாடலான பூ வாசனை என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலின் வரிகளை விவேகா எழுதியுள்ளார். சித்து குமார் இசையமைத்துள்ள இந்த பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார்.