மருத்துவம் இன்றி உடல் ஆரோக்கியமாக இருக்க கடைப்பிடிக்க வேண்டிய ஒரு பயிற்சி யோகா. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் யோகாவை செய்யலாம். குழந்தைகளுக்கு சிறு வயது முதல் யோகா பயிற்சியை கொடுத்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். யோகா பயிற்சி செய்பவர்களுக்கென்று தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவில்கள் இருக்கின்றது. அறிவியல் ரீதியாகவும் கிரகங்களின் நிலையிலும் யோகா பயிற்சி செய்பவர்களுக்கு நற்பலன்களை கொடுக்கும் வல்லமை கொண்ட கோவில் பற்றிய தொகுப்பு
பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருப்பட்டூர்
திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் திருப்பட்டூர் என்ற இடத்தில் பிரம்ம மற்றும் குருவிற்கான ஆலயமாகா ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் அருகே பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி, புலிக்கால் முனிவர் கோவில் அமையப்பெற்றுள்ளது. அங்கு யோகக்கலை பயில்பவர்கள் சென்று புலிக்கால் முனிவர், குரு, பதஞ்சலி முனிவர் ஆகியவர்களை தரிசிப்பதன் மூலம் சிறப்பான பலன் கிடைக்கும்.
18 சித்தர்கள் ஆலயம், சென்னை
சென்னையில் தாம்பரம் கேம் ரோடு அருகே இருக்கும் 18 சித்தர்கள் ஆலயத்திற்கு யோகக் கலை பயிற்சி செய்பவர்கள் சென்று வருவதனால் யோகா கலையில் சிறந்து விளங்கிய அகத்தியர் முதலான பதினெட்டு சித்தர்களின் ஆசியும் கிடைத்து நன்மையே நடக்கும்.
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில், பழனி
சித்தர்களுக்கு மூலமுதற் கடவுளாக திகழ்பவர் அருள்மிகு முருகன். செவ்வாய்க்கு அதிபதியா முருகக் கடவுளை பழனி மலைக்கு சென்று தரிசிப்பது யோகக் கலையில் மிகச் சிறந்த நிலையை அடைவதற்கு உதவும்.