பழமையான & புராதனமான (முறைப்படி பூஜை நடைபெற்றுவரும்) திருக்கோவில்களில்=அதுவும் சித்தர்கள் அருளிய அல்லது ஜீவசமாதி அடைந்த கோவில்களில் மிகுதியான பிரபஞ்ச சக்தி (காந்த சக்தி) இருக்கும் இந்த தெய்வீக சக்தி பல அரிய ஆற்றல்களை கொண்டது. இது ஆத்ம பலத்தினை தரவல்லது.
இயன்றளவு கோவில்களுக்கு அடிக்கடி செல்வதன் மூலம் நமது மூளையின் நரம்பு மண்டலங்கள் வெகுவாய் பல அடைந்து- தற்போது மாசடைந்து வரும் இயற்கைச் சூழலிலிருந்து மிகவும் எளிதாய் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.
ஞாபக மறதி நோய் பிடியிலிருந்து (அதிகமாய் செல்போன் பயன்படுத்துவதன் மூலமும் ஏற்படும்) வெகு சுலபமாய் தப்பிவிடலாம். நோய் எதிர்ப்பு சக்தியினை பெருக்கிக் கொள்வதற்கும், எதையும் எதிர்கொள்ளும் வல்லமையான எண்ணங்கள் பெறுவதற்கும், உறுதியான மனம்,உடல் தனை பெறுவதற்கும் திருக்கோவில் வழிபாடே ஒரே தீர்வாகும்.
மூலஸ்தானத்தில் தரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தகடுகளும் அபரிதமான சக்தியை தந்துகொண்டிருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு கால பூஜையின் போதும் திரை விலக்கி ஆரத்தி நிகழும் தருணத்தில் எல்லையில்லா சக்தி மூலஸ்தானத்திலிருந்து வெளிவரும். அதனால் தான் மூலஸ்தானத்தில் ஒரு பக்கம் மட்டுமே திறந்தபடி உள்ளது. (அதன் வாயிலாய் அரும்பெரும் சக்தி வெளிப்படுகின்றது).
மேலும்-கொடி மரமும் கோபுரக்கலசமும் அளப்பரிய (ENERGY) காந்த சக்தியை கட்டுக்கோப்பாய் (CIRCULATE) பரிமாறிக் கொண்டிருக்கிறது. எனவே தான் பிரசாதத்தினை உண்பதும் அபரிதமான நன்மைகளைத் தருகிறது. தந்திடும் என்பது திண்ணம்..!
அத்தகைய பழமையான திருக்கோவில்களில்/ஜீவசமாதிகளில் அன்னதானம் செய்வதும்,உண்பதும் பெரும் பரிகாரம் என்பதை முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.