Home சினிமா செய்திகள் தனுஷின் “ராயன்” படம் குறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பதிவு… என்ன சொன்னாருன்னு பாருங்க…!!!

தனுஷின் “ராயன்” படம் குறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பதிவு… என்ன சொன்னாருன்னு பாருங்க…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகர் தனுஷ் தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள திரைப்படம் ”ராயன்”. இவரின் 50 ஆவது படத்தை இவர் நடித்தும் இயக்கியும் உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் இவருடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த 26 ஆம் தேதி ரிலீசான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தை பார்த்த பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ”நேற்று ராயன் படம் பார்த்தேன். தனுஷ் நன்றாக நடித்தும் இயக்கியுமுள்ளார். மேலும், எஸ். ஜே. சூர்யா வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் இருக்கும் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் சார் சிறப்பான இசையமைத்துள்ளார். தனுஷின் 50வது படத்துக்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.