Home செய்திகள்உலக செய்திகள் காசாவில் உள்ள குழந்தைகள் போலியவால் பாதிக்கப்படும்அபாயம்…சுகாதார அமைச்சகம்….!!!

காசாவில் உள்ள குழந்தைகள் போலியவால் பாதிக்கப்படும்அபாயம்…சுகாதார அமைச்சகம்….!!!

by Sathya Deva
0 comment

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தற்போது உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காசா மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் காசாவில் உள்ள குழந்தைகள் போலியவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறும் போது காசாவில் கழிவு நீர் மாதிரிகளின் தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது என கூறியுள்ளார். இதனால் உலக சுகாதார நிறுவனம் காசாவிற்கு ஒரு மில்லியன் போலிய தடுப்பூசிகளை அனுப்புகிறது. இந்த தடுப்பூசிகள் குழந்தைகளை சென்றடைவதே உறுதி செய்ய போர் நிறுத்தம் தேவை என்றார். காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது போலியோ தொற்று நோய் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.