தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் முக்கிய நடிகராக வலம் வருகிறார். இவர் தனது 68 வது படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து இவர் தனது கடைசி படமாக விஜய் 69 படத்தில் நடிக்கவுள்ளார்.
இதன் பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இவரின் மகன் ஜேசன் விஜய் இயக்குனராக களம் இறங்குகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும், இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் வேலைகள் தொடங்கி விட்டதாகவும் சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது.