மேஷம் ராசி அன்பர்களே…! பரிகாரம் என்ற பெயரில் பண விரயம் செய்ய வேண்டாம்.
மனம் அமைதி அடைந்து விட்டால் எல்லா பிரச்சினைக்கும் தீர்வு இருக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்கு கோவம் வரும். பெரிய மனிதர்களிடம் சந்திப்பு ஏற்படும். பிரச்சனைகளை துல்லியமாக ஆராயுங்கள். பணம் நெருக்கடி சமாளித்து விடுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வரும். புதிய வாகனங்கள் வாங்க போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். வருகின்ற சந்தர்ப்பங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இறைவன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. உங்களுடன் பக்கபலமாக துணையாக யாராவது இருப்பார்கள். யாரையும் உதாசினம் படுத்த வேண்டாம். நல்ல நண்பர்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
புதிய வசதி வாய்ப்புகளை பெறுவதற்கு. ஆதாயம் உங்களுக்கு சீராக வரும். உத்தியோகத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் ஏற்பட்ட தடைகள் விலகும். பெண்கள் குழப்பமான மனநிலையில் காணப்படுவீர்கள். பெண்கள் யோசித்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி இருக்கும். இறைவன் வழிபாட்டில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். காலை நேர மகிழ்ச்சியாக இருக்கும். மாற்றங்கள் ஒரு பக்கம் ஏற்படும். காதல் மனக்கசப்பு கொடுத்தாலும் இறுதியில் வெற்றியை கொடுக்கும்.
மாணவர்களுக்கு மகிழ்ச்சி குறைவு இருக்காது. மாணவர்களுக்கு புதுமை படைக்கும் நாளாக இருக்கும். புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.