Home மாவட்ட செய்திகள்வடக்கு மாவட்டம்கள்ளக்குறிச்சி தாய் வீட்டிற்கு சென்ற பெண் மீது தாக்குதல்…. தம்பி உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

தாய் வீட்டிற்கு சென்ற பெண் மீது தாக்குதல்…. தம்பி உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

by dailytamilvision.com
0 comment

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று விஜயலட்சுமி எம்.ஆர்.என் நகரில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது விஜயலட்சுமியின் தம்பி மணிகண்ட சிவா, அவரது மனைவி கல்பனா ஆகியோர் இந்த வீட்டில் உனக்கென்ன வேலை என தகாத வார்த்தையால் விஜயலட்சுமியை திட்டி தாக்கியுள்ளனர்.

மேலும் விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து வீட்டிலிருந்து டிவி, வாஷிங் மெஷின் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மணிகண்ட சிவா, கல்பனா ஆகிய இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.