மேற்கு வங்காளம் மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் ரங்கபாணி என்ற இடத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இந்த ரயிலில் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் இதே பகுதியில் கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மேற்கு வங்க தலைநகர் கல்கத்தாவில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த ரயில் ஜார்கண்ட் மாநிலத்தின் தடம் புரண்டது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர் மற்றும் 20க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.