Home செய்திகள் கேரள மாநிலத்தில் கனமழை…பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…!!!

கேரள மாநிலத்தில் கனமழை…பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…!!!

by Sathya Deva
0 comment

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இந்த மாத தொடக்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் மேலும் சில நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வயநாடு, மலப்புரம், இடுக்கி ,திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 204 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த எட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கன மழை ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் வரை பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டு உள்ளார். மேலும் கன மழை காரணமாக இந்த மாநிலத்தின் பல பகுதிகளின் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.