உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவருக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டார்லிங் என்ற திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை அனுப்பி வருகிறது.
இதுவரை 4500-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு புவி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 22 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைக்கோள்கள் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவெரல் ஏவுதளத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலமாக செலுத்தப்பட்டது. மேலும் இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் புவி வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.