Home செய்திகள் இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட் நகரம்….பா.ஜ.க எம். பி பீம் சிங்….!!!

இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட் நகரம்….பா.ஜ.க எம். பி பீம் சிங்….!!!

by Sathya Deva
0 comment

நாடு முழுவதும் நகரமயமாக்கலை அதிகரித்து ஹை-டெக் நகரங்களை உருவாக்கி அதற்கு நமோ நகர்கள் இன்று பெயரிட வேண்டும் என மாநிலங்களவையில் பாஜக எம்.பி தனி நபர் மசோதா கொண்டு வந்துள்ளார். பீகரை சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி பீம் சிங் கொண்டு வந்துள்ள இந்த மசோதாவில் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கிராமங்களை விட நகர மக்கள் அதிகம் முன்னேற்றம் அடைந்துள்ளன எனக் கூறியுள்ளார்.

இதன் மூலம் இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க 2015 ஆம் ஆண்டு கொண்டு வந்த திட்டத்தை பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். உதாரணமாக சண்டிகர் மாநிலத்தின் சமீப காலங்களாக நகரமயமால் மூலம் அதிக பொருளாதார நன்மைகள் கிடைத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சுருக்கி நமோ என பாஜகவினர் குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.