Home செய்திகள் சிட்டிசன் திரைப்படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமம் காணாமல் போனது போல….பூஞ்சிரித்ததோடு குக்கிராமம் மாயம்….!!!

சிட்டிசன் திரைப்படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமம் காணாமல் போனது போல….பூஞ்சிரித்ததோடு குக்கிராமம் மாயம்….!!!

by Sathya Deva
0 comment

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டகை, சூழல் மலை மற்றும் மேம்பாடி ஆகிய கிராமங்களில் கடந்த 30ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியானார். மேலும் பல பேர் காணாமல் போயினர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது. இதற்கிடையில் அங்கு இருந்த குக் கிராமங்களும் நிலச்சரிவில் சிக்கியது. அதில் ஒன்றுதான் பூஞ்சிரித்ததோடு குக்கிராமம். இது முண்டகை கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் மலைப்பாங்கான இடத்தில் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தில் 118 குடும்பத்தினர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரே நாளில் இரவில் அந்த குக்கிராமம் காணாமல் போனது. நிலச்சரிவுடன் ஆர்ப்பரித்து வந்த காட்டாற்று வெள்ளம் அந்த குக்கிராமத்தை மண்ணோடு மண்ணாக மூடியது என கூறப்படுகிறது. மேலும் அங்கு வாழ்ந்து வந்த மக்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் அஜித்குமார் நடித்த சிட்டிசன் திரைப்படத்தின் அத்திப்பட்டி என்ற கிராமம் காணாமல் போனது. அதுபோல பூஞ்சிரித்ததோடு கிராமத்திற்கு அந்த நிலைமை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.