Home சினிமா செய்திகள் செம மாஸ்! 100 கோடி வசூலை குவித்த “ராயன்”… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

செம மாஸ்! 100 கோடி வசூலை குவித்த “ராயன்”… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகர் தனுஷ் அவரின் 50வது படமான ”ராயன் படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி ரிலீசான இந்த படம் 7 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை உலக அளவில் 102 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஏழு நாட்களில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.