நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் இவர் தனது 170 ஆவது படமான ”வேட்டையன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பாத் பாஸில், மஞ்சுவாரியார், அமிதாபச்சன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டப்பிங் பணிகளை தான் தொடங்கி இருப்பதாக நடிகை துஷாரா விஜயன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.