கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29ஆம் தேதி இரவில் கனமழை கொட்டியது. இதனால் அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள், பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்து சொல்லப்பட்டன. சம்பவம் நடந்த நேரம் அதிகாலை என்பதால் அங்கு வசித்தவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் நடக்க போகும் விபரீதத்தை உணராத நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மேலும் பலர் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளனர்.https://twitter.com/i/status/1818918729452823037
இதில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது. 3வது நாளாக இன்றும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வயநாட்டில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்திற்கு நடுவே தண்ணீரில் மூழ்கிய பாலத்தில் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை கணவன் துணிச்சலாக காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பதற வைக்கும் காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.