நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் இவர் தனது 170 ஆவது படமான ”வேட்டையன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பாத் பாஸில், மஞ்சுவாரியார், அமிதாபச்சன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, நடிகர் மஞ்சுவாரியார் இந்த படம் குறித்து பேசியதாவது, ”நான் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக நடிக்கிறேன். எனக்கு முதலில் சூப்பர் ஸ்டார் நடிக்கிறார் என தெரியாது நான். ஜெய் பீம் என்ற படத்தை எடுத்த ஞானவேல் சாரின் படம் என்பதால் இந்த படத்திற்கு ஒப்புக்கொண்டேன். மேலும், எனக்கு ரஜினிகாந்தின் ஜோடியாக நடிக்கிறேன் என்பதை காட்டிலும் ஞானவேல் அவர்களின் படத்தில் நடிக்கிறேன் என்ற பொறுப்பு மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது” எனக்கு கூறியுள்ளார்.