Home செய்திகள் வயநாடு நிலச்சரிவு….கேரளா அரசுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பதில்…!!!

வயநாடு நிலச்சரிவு….கேரளா அரசுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பதில்…!!!

by Sathya Deva
0 comment

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆனால் அதிக கனமழை நிலச்சரிவு பற்றிய துல்லிய வானிலை எச்சரிக்கையை அளித்திருந்தால் மக்களை அங்கிருந்து இடமாற்றம் செய்திருக்கலாம் என குரல்கள் எழும்புகின்றன. இந்த கேள்வியானது மாநிலங்களவையில் எழுப்பப்பட்டது. அதற்கு உள்துறை மந்திரி அமித்ஷா கேரளா அரசுக்கு கடந்த 23ஆம் தேதி முதல் வானிலை எச்சரிக்கை மத்திய அரசால் அளிக்கப்பட்டது என்றும் இந்த எச்சரிக்கையானது மூன்று நாட்களுக்கு அளிக்கப்பட்டது என கூறியுள்ளார். மேலும் அங்கு 20 சென்டிமீட்டர் மேல் மழை பெய்யக்கூடும் என்றும் கேரளா அரசுக்கு 26 ஆம் தேதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று கூறியுள்ளர். இதனால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படும் என்று மத்திய மந்திரி கூறினார்.

அதை மறுத்த கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் எங்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் அளிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். பின்பு நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு ரெட் அலெர்ட் எச்சரிக்கை வந்தது என்றும் பின்பு பச்சை எச்சரிக்கை தான் வந்தது அதில் சிறிய அளவில் நிலச்சரிவு அல்லது பாறை வெடிப்போ ஏற்பட்டலாம் என்று தான் கூறப்பட்டிருந்தது. மத்திய மந்திரி கூறுவது உண்மைக்கு முரணாக உள்ளது என கூறியுள்ளார். மேலும் இந்திய வானிலை மையம் கொடுத்த செய்தி குறிப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 18 ஆம் தேதி செய்தி குறிப்பில் 19ஆம் தேதி கேரளாவின் வடபகுதியில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜூலை 23ஆம் தேதி செய்தி குறிப்பில் கேரள மற்றும் மகேயில் 25ஆம் தேதி சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் 27ஆம் தேதி கன மழை பேய் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.