நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி ”. இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.