ஓடிசாவில் சத்யஜித் என்பவர் திருமணம் செய்து ஏமாற்றியதாக 2 பெண்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பெண் போலீஸ் அதிகாரியை அவரிடம் பேச வைத்து பொறிவைத்து அவரை பிடித்துள்ளனர். பின்பு கைது செய்யப்பட்ட சத்திய ஜீப் சமாலிடம் இருந்து 2.10 லட்சம் ரொக்க பணம், கார், மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, வெடி மருந்துகளை போலீசார் கைப்பற்றினர். அவரின் 3 வங்கிகணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர். அவரது 5 மனைவிகளில் இரண்டு பேர் ஒடிசாவை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.மேலும் ஒருவர் கொல்கத்தா மற்றும் இன்னொருவர் டெல்லியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இவர் இளம் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களை மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு ஏமாற்றியுள்ளார். பின்பு சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்த பின்னர் பணத்தை திரும்ப கேட்டால் துப்பாக்கியை காட்டி அவர் மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. போலீசாரின் விசாரணையில் அவர் மேட்ரிமோனி உரை தளத்தில் 49 பெண்களுடன் திருமணம் தொடர்பாக பேசி வந்தது தெரிய வந்துள்ளது. அவரால் ஏமாற்றப்பட்ட பல பெண்கள் இதன் பிறகு புகார் கொடுக்க வருவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.