Home செய்திகள் கேரள மாநிலம்….வயநாட்டில் 1208 வீடுகள் அழிந்தன…!!!

கேரள மாநிலம்….வயநாட்டில் 1208 வீடுகள் அழிந்தன…!!!

by Sathya Deva
0 comment

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 350-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தரைமட்டமாகிவிட்டது என கூறப்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் மக்கள் வசித்து வந்த பகுதிகள் தானா என்று கேள்வி எழும் வகையில் எங்கு பார்த்தாலும் பாறைகள், மரக்குவியலாக கிடைக்கின்றன. அவற்றை பெரும்பாடு பட்டு ராணுவ வீரர்கள் மற்றும் மீட்டு குழுவினர் அகற்றி தேடுதல் பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலச்சரிவில் வயநாட்டில் 1208 வீடுகள் முற்றிலுமாக இடிந்து அழிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் முண்டகையில் 540 வீடுகளும் சூரல் மலைப்பகுதியில் 600 வீடுகளும் அட்டமலை பகுதியில் 68 வீடுகளும் முற்றிலுமாக இடிந்து விட்டன. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ அதிகாரிகளோ இப்படி ஒரு பேரழிவை பார்த்ததில்லை என்று கூறி இருக்கின்றனர். அந்த அளவிற்கு நிலச்சரிவால் மிகப்பெரிய அழிவை வயநாடு சந்தித்து இருக்கிறது என குறிப்பிடப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.