உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய இடமாக மாறி உள்ளது. தாஜ்மஹால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன என்றும் இந்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றனர். தேஜோ மகால் முன்பு அழைக்கப்பட்ட இக்கோவில் முகலாய ஆட்சியில் தாஜ்மஹால் என மாற்றம் செய்யப்பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அகில பாரத இந்து மகாசபையே சேர்ந்த ஷியாம் பாபு சிங், விக்னேஷ் சவுத்ரி என்ற இரு இளைஞர்கள் தாஜ்மஹாலில் உள்ளே மும்தாஜ்-ஷாஜகானின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை பகுதியில் கங்கை நீரை ஊற்றியுள்ளனர். மேலும் அங்கு உள்ள சுவர்களின் ஓம் ஸ்டிக்கர் களையும் ஒட்டி உள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தின் வைரலாகி பல கண்டனங்களை குவித்து வருகிறது. இதை அடுத்து இருவரையும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் கைது செய்துள்ளனர்.