ரிஷபம் ராசி அன்பர்களே…! காரியங்கள் ஓரளவு கை கூடும்.
பிரச்சனைகளில் துல்லியமாக ஆராய்ந்து வெற்றி காண்பீர்கள். முன்பின் தெரியாத நபர்களிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அனைவரிடமும் பணிவுடன் நடந்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக திட்டமிட்ட புனித பயணம் நடைபெறும். தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனைவியின் உதவியை பெற்று மகிழ்வீர்கள். நன்மைகள் ஒரு பக்கம் உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். வாகன யோகம் ஏற்படும். பெரியவர்களின் உதவி பரிபூரணமாக கிடைக்கும். மனதிற்குள் தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரம் நன்றாக நடைபெறும். வாக்கு வன்மையால் லாபம் சீராக இருக்கும். பழைய பாக்கி வசூல் ஆகும். அரசாங்கம் தொடர்பான செயல்கள் சாதகமான பலனை கொடுக்கும். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். முடிவுகளை லாபகமாக எடுப்பீர்கள். உணர்ச்சிவசம் கோபம் பட வேண்டாம். தோழிகளுடன் சிரித்து பேசி மகிழ்வீர்கள்.
பெண்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்கு புதுமை படைக்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் சித்தர்கள் வழிபாட்டை விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.