பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் காலிறுதிக்கு முந்திய சுற்று இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யூ சுசாகியை எதிர்கொண்டார். இதில் 3-2 என்ற புள்ளி கணக்கில் வினேஷ் போகத் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மேலும் தொடர்ந்து மாலை நடைபெற்ற காலிறுதியில் உக்ரைன் வீராங்கனைய வீழ்த்தி வினேஷ் போகத் அரையிறுதிக்கு தகுதி பெற்றார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுவரை சர்வதேச போட்டிகளில் யாராலும் தோற்கடிக்கப்படாத நம்பர் ஒன் வீராங்கனையாக ஜப்பானின் யு சுசாகியை முதல் முதலாக தோற்கடித்த பெருமையை பெற்றுள்ளார் வினேஷ் போகத். யு சுசாகி இதுவரை தான் விளையாடிய 82 சர்வதேச போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றவர் என்பதும் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் மற்றும் நான்கு முறை உலக சாம்பியன் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.