கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து கன மழை கொட்டியதால் கடந்த 30ஆம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலியாற்றின் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது இதில் முண்டகை, சூரல்மழை, மேம்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக அழிந்தன. நிலச்சரிவால் வீடுகள், கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டுள்ளது, நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன, இந்த பயங்கர சம்பவத்தில் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர்.
மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேடுதல் பணி நேற்று ஒன்பதாவது நாளாக நீடித்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 400 தாண்டியது என குறிப்பிடப்படுகிறது. இன்று பள்ளத்தாக்கு பகுதிகளின் தேர்தல் வேட்டையை ஆரம்பித்தனர். அதில் சில உடல்களை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வயநாடு நிலச்சரிவுகளில் பலியானவர்கள் எண்ணிக்கை 414 ஆக உயர்ந்த உயர்ந்துள்ளது. இந்த பள்ளத்தாக்குகளின் மேலும் பல உடல்கள் இருக்கலாம் என்று கருதப்படுவதால் அங்கு தேடுதல் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.