Home செய்திகள்உலக செய்திகள் ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் மசோதா…எதிர்க்கும் பெண்கள்…!!!

ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் மசோதா…எதிர்க்கும் பெண்கள்…!!!

by Sathya Deva
0 comment

ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆண்குழந்தைகளுக்கு 15 வயதிலும் , பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும். ஆனால் தற்போதுவரை ஈரானில் பெண்களின் திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 ஆக உள்ளது. தற்போது மொழியப்பட்டுள்ள மசோதவைன்படி, பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்தில், 9 வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுக்கலாம் என கூறியுள்ளது.

இவர்களுக்கு சட்டப்பூர்வ வயது 18 ஆக இருந்தாலும் ஏற்கனவே ஈராக்கில் 28 சதவீத பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது என்று ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ள நிலையில், தற்போதய இந்த வயது தளர்வு ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே இந்த மசோதவனுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.