நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுவரை இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளை வித்தியாசமாக செய்ய உள்ளாராம் வெங்கட் பிரபு. மேலும் இந்த பிரமோஷன் பணிகளில் விஜய் ஓகே சொன்னால் அவரையும் வீடியோவில் பயன்படுத்த பிளான் போட்டுள்ளதாக சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது.