வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலகக் கோரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நீதிபதிகள் பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதிப்பதாக மாணவ அமைப்புகள் தெரிவித்தனர்.
மேலும், சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிடும் வகையில் மாணவர்கள் திரண்டனர். இதையடுத்து அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை தலைமை நீதிபதி ரத்து செய்தார். இந்த நிலையில் நீதிபதிகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் வங்காளதேசத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.