Home செய்திகள் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில்….லஞ்சமாக உருளைக்கிழங்கு கேட்ட போலீசார்…!!!

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில்….லஞ்சமாக உருளைக்கிழங்கு கேட்ட போலீசார்…!!!

by Sathya Deva
0 comment

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ராம் கிரிபால் சிங் என்ற சப் இன்ஸ்பெக்டர் ஒரு வழக்கை முடித்து வைப்பதற்கு லஞ்சம் கேட்டதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த ஆடியோவில், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் ஒரு விவசாயியிடம் 5 கிலோ “உருளைக்கிழங்கு” கேட்கிறார்.

அதற்கு விவசாயி என்னால் 2 கிலோ உருளைக்கிழங்கு தான் கொடுக்க முடியும் என்று பதில் சொல்கிறார். கடைசியாக 3 கிலோ உருளை கிழங்கு கொடுப்பதாக இருவரும் டீல் பேசியுள்ளார். இந்த விசாரணையில், “உருளைக்கிழங்கு” என்ற வார்த்தை லஞ்ச பணத்திற்கான குறியீடாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. ஆடியோ வைரலானதை அடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ராம் கிரிபால் சிங் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்த கன்னோஜ் எஸ்பி அமித் குமார் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். 

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.