71
கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிஸ்மோவா உடன் மோதினார். இதில் அனிஸ்மோவா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் அனிஸ்மோவா, சக நாட்டு வீராங்கனை எம்மா நவாரோவை சந்திக்கிறார். நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் ரஷிய வீராங்கனை டயானா ஸ்னெய்டர், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொள்கிறார் என கூறப்படுகிறது.