98
உத்தரபிரதேச மாநிலம் பில்பூர் அருகே ஹவுரா- அமிர்தசரஸ் மெயிலின் பொதுப் பெட்டியில் இன்று சிலர் தீயை அணைக்கும் கருவியை இயக்கியுள்ளனர். இதனால், அந்த பெட்டி முழுவதும் புகை கிளம்பியுள்ளது. புகையை கண்ட சக பயணிகள் ரெயிலில் தீ பிடித்ததாக நினைத்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, பயணிகள் சிலர் பீதியில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்துள்ளனர். இதில், 12 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக வடக்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.