இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் கார்டோ சாட், ஸ்காட்சாட், ரிசர்ட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் தொலைத்தொடர்பு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அதில் புவிக்கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஓ.எஸ்.-08 எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து வருகிற 15 ஆம் தேதி காலை 9.17 மணிக்கு எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது. எனினும், இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ராக்கெட் ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.