மத்தியபிரதேச மாநிலத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் தனது நிலத்தை கையகப்படுத்தி விட்டனர் என்று 2 ஆண்டுகளாக விவசாயி ஷியாம்லால், போராடி வருகிறார். 2 ஆண்டுகளாக தனது புகார்கள் புறக்கணிக்கப்பட்டதால் மனமுடைந்த அவர், பொது விசாரணைக்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் உருண்டு சென்றார்.https://twitter.com/TheSootr/status/1823301334675685649?
அப்போது விவசாயி உருண்டு செல்வதை பார்த்து அதிர்ச்சியான மக்களை அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். விவசாயியின் விண்ணப்பத்தைப் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் அனுப்குமார் சிங் உறுதியளித்துள்ளார்.