நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை மொத்தம் 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.
இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தற்போது தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி https://exams.nta.ac.in/NEET என்ற இணையதளம் முகவரியில் ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஹால் டிக்கெட் பெறுவதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் 011-40759000 என்ற தொலைபேசி நம்பரிலோ அல்லது [email protected] என்ற இணையதள முகவரியிலோ புகார் கொடுக்கலாம்
1 comment
Date enna