விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. இவர் தனுஷ் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு, சமுத்திரகனி நடித்த அப்பா படத்தில் நடித்திருந்தார்.
இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியல் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர், தனக்கு வரும் மோசமான கருத்துக்கள் குறித்து பேசியுள்ளார். அதன்படி, ”நான் எப்படி உடை அணிந்தாலும் தவறான கமெண்ட் தான் செய்கிறார்கள். சேலையில் புகைப்படம் போட்டாலும் சரி, டி-ஷர்டில் போட்டோ போட்டாலும் சரி மோசமான கருத்துக்கள் தான் வருகிறது. அதனால் இப்போது எல்லாம் எனக்கு வரும் கமெண்ட்களை நான் பார்ப்பதில்லை” என கூறியுள்ளார்.