சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, அடுத்த வாரம் சன் டிவி மூன்று முடிச்சு என்ற புதிய சீரியல் தொடங்க இருக்கிறது. இதே போல தற்போது விஜய் டிவியும் புதிய சீரியல் ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி, ”கண்மணி அன்புடன்” என பெயரிடப்பட்ட இந்த சீரியலின் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. கிராமத்து பெண் மற்றும் மாடர்ன் பெண் இருவர்களின் நட்பை பற்றி தான் இந்த கதை இருக்கும் என இந்த ப்ரோமோவை பார்க்கும் போது தெரிய வருகிறது.