Home செய்திகள்உலக செய்திகள் முதல் போர்ட்டபிள் மருத்துவமனை…இந்திய ராணுவம் பரிசோதனை…!!!

முதல் போர்ட்டபிள் மருத்துவமனை…இந்திய ராணுவம் பரிசோதனை…!!!

by Sathya Deva
0 comment

இந்தியாவில் மருத்துவ வசதிகள் சென்று சேராத பகுதிகளுக்கு மருத்துவமனை சேவைகளை வழங்குவதற்காக முயற்சியின் முக்கிய பகுதியாக உலகின் முதல் போர்ட்டபிள் மருத்துவமனையை இந்திய ராணுவம் பரிசோதித்துள்ளது. மலையாக இருந்தாலும் காடாக இருந்தாலும் எங்கும் எடுத்துச்செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆரோக்கிய மைத்ரி ஹெல்த் கியூப் எனப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த போர்ட்டபிள் மருத்துவமனை உலகின் முதல் போர்ட்டபிள் மருத்துவமனையாக உள்ளது. BHISHM (Bharat Health Initiative for Sahyog, Hita & Maitri) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்திய ஆயுதப் படையும் வான் படையும் இணைந்து பாராசூட் மூலம் லடாக்கில் 15,000 அடி உயரத்தில் உள்ள பகுதியில் இந்த போர்ட்டபிள் மருத்துவமனையை எடுத்துச்சென்று நிலை நிறுத்திப் பரிசோதித்துள்ளது. இது ஒரு மைல்கல் சாதனை என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராணுவத்தினர் மருத்துவமனையை 15,000 அடி உயரத்தில் உள்ள பகுதியில் நிலை நிறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.