அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், கனடா உள்ளிட்ட ஏழு நாடுகளை உள்ளடக்கி G7 அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மாநாடு இந்த வருடம் இத்தாலி நாட்டில் வைத்து நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா உட்பட 12 நாடுகளுக்கு இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று இந்தியா சார்பாக பிரதமர் மோடி இத்தாலி சென்றிருந்தார்.
https://x.com/narendramodi/status/1801670928985997637
அங்கு அமெரிக்கா அதிபர் பைடனை சந்தித்து மோடி அவர்கள் பேசியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடனை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி தான். இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உலக நன்மைக்காக செயல்படும் என குறிப்பிட்டுள்ளார்.