Home செய்திகள்உலக செய்திகள் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்…மரத்திற்கு ராக்கி கட்டினாரா…?

பீகார் முதல்வர் நிதிஷ்குமார்…மரத்திற்கு ராக்கி கட்டினாரா…?

by Sathya Deva
0 comment

ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒரு மரத்திற்கு ராக்கி கயிறு கட்டினார். பின்னர் மரக்கன்றுகளை அவர் நட்டார். இந்த நிகழ்வில் அவருடன் பீகார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் இருந்தனர்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பீகாரின் பசுமையை பாதுகாக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மாநில அரசு 2012-ம் ஆண்டு முதல் ரக்ஷா பந்தன் பண்டிகையை ‘பீகார் விருக்ஷ் சுரக்ஷா திவாஸ்’ ஆக கடைபிடித்து வருகிறது. நாம் மரங்களை நட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். மரக்கன்றுகளை நடுவதில் மாநில அரசு கவனம் செலுத்துகிறது. மாநிலத்தில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை அரசுஊக்குவித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.