ஏ ஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றதை நாம் உணர்ந்து வருகிறோம். இந்நிலையில் பலதரப்பட்ட நன்மைகளை தொழில்நுட்பம் உள்ளடக்கியிருந்தாலும் மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் அபாயம் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டிப் பேக் வீடியோக்கள் பலருடைய வாழ்க்கையுடன் விளையாட தொடங்கி இருக்கிறது. இதில் இருக்கும் வீடியோவில் உள்ளவரின் முகத்துடன் வேறு ஒருவருடைய முகத்தை இணைத்து வீடியோவில் உள்ளவர் செய்யும் செயல்களை மற்றொருவர் செய்வது போல தோற்றத்தை ஏற்படுத்த முடியும் அளவுக்கு வசதி உள்ளது.
இதனை பயன்படுத்தி பல பிரபலங்களின் முகத்தை இணைத்து அந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இந்தி நடிகை ராஷ்மிகா அவர்கள் இந்த டிப் பேக் வீடியோ சர்ச்சையில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதிலிருந்து டிப் பேக் அபாயத்தை உணர்ந்து இது குறித்து அவர் எச்சரித்து வருகின்றார். இதனை அடுத்து தற்போது பாலிவுட் நடிகை ஆலியா பட் டிப் பேக் வீடியோ வெளியாகி இணையதளத்தில் உலா வருகிறது.
பின்னர் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களில் அலீயா பட் அலங்காரம் செய்து கொள்வது போல ‘Get ready with me’ என்ற ஹேஷ்டேக் வைரலாக தொடங்கி இருக்கிறது. இருப்பினும் அவை உண்மையில் டிப் பேக் வீடியோக்கள் என்று கண்டறியப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து நடிகை வாமியா காபியின் முகத்துடன் ஆலியா பட்-யின் முகம் டிப் பேக் செய்யப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இதில் பிரதமர் மோடி, ராஷ்மிகா மந்தனா மட்டுமில்லாமல் நடிகை கஜோல் மற்றும் கத்ரீனா கைஃப் என பலரது டிப் பேக் வீடியோக்களும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.